
உன் நினைவில் நனைந்திடவே
பிடிக்கிறதே பனித்துளியே
துளித்துளியாய் தேன்துளியாய்
கலந்திடுவாய் ஜீவனிலே
பார்த்தால் நீ பனித்துளியோ
பழக்கத்திலோ தேன்துளியோ
புன்னகையோ பௌர்ணமியோ
நம் காதல் வளர்பிறையோ!!
தாலாட்டும் குரலில் மயிலிறகாய் வருடும்
உன் அழைப்பைத் தேடும் தொலைபேசி கருவி
உறங்காமல் உளறும் உறக்கத்திலோ சிரிக்கும்
கனவோடும் வருவாய் கற்பனையும் பிறக்கும்

நெஞ்சில் சிறு வலியோடு கண்ணின் இமை மூடாது
அலைந்தேனே சிலகாலம்
கண்ணில் புது பொலிவோடு வந்தாய் நீ தேவதையே
இனிமேல் நம் பொற்காலம்

உன் மடியில் உறங்கிடவே
துடிக்கிறதே இரு விழியே
உன் அணைப்பில் வாழ்ந்திடவே
காத்திருப்பேன் கண்மணியே!!
4 comments:
ஷங்கி... :))) கவிதை வரிகள் சந்தங்களோடு வாசிக்க வாசிக்க மனதுக்கு நிறைவாய் இருக்கிறது... !!!
//தாலாட்டும் குரலில் மயிலிறகாய் வருடும்
உன் அழைப்பைத் தேடும் தொலைபேசி கருவி
உறங்காமல் உளறும் உறக்கத்திலோ சிரிக்கும்
கனவோடும் வருவாய் கற்பனையும் பிறக்கும் //
:)))
மொத்தமாகவே மிகவும் ரசித்தேன்..
இவற்றை இன்னும் அதிகம் ரசித்தேன்.....
வரிகளெல்லாம் தேன்..:)))
சினிமாவுக்கு பாட்டு எழுதலாமே... (நவீனின் கருத்துக்கு ஒத்துப்போகிறேன்.)
உங்கள் படைப்புகளை வலைச்சரத்தில் பதிவிட்டு உள்ளேன்.. வந்து கருத்துரை தருக..
தேவா..
http://blogintamil.blogspot.com/
Post a Comment