Tuesday, December 16, 2008
வண்ணத்திரைகள்
வண்ணத்திரைகள்
உனை ஆளும் குட்டிபுதிர்கள்
உற்று பார்த்தால் தெரியும்
சின்ன வண்ணத்திரைகள்
ஒவ்வொரு திரையும் நீ
தொய்வின்றி திறந்தால்
ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்
எளிதில் திறக்கும் என்று
எகத்தாளம் இருந்தால்
எதுவோ ஒன்று உன்
அருகில் நின்று
எட்டித் தள்ளும் - உன்னகம்
மண்முட்டி கவிழும்
புதிரின் திரையோ நீ
விடையை அறிய
பல வாய்ப்பும் வழங்கும்
சரியாய் காலம் கனிந்தால்
எல்லாம் விளங்கும் நீ
பொறுமை காத்தால்
திரையும் விலகும் என்றும்
தேடல் கொண்டால்
ஒவ்வொரு நிறமே
திரை ஒன்றும்
ஒவ்வொரு நிறமே
ஒவ்வொரு நிறமும் வாழ்வின்
ஒவ்வொரு பிரிவே
தக்க தருணம் வரையில் நீ
பக்க பலங்கள் சேர்த்தால்
கற்று தருமே - வாழ்வும் முழுதாய்
முற்றுப் பெறுமே!!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஷங்கி....
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க... ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு அர்த்தம் கிடைக்கிறது... இப்படி ஆழமாக எழுத எப்படி கற்றுக்கொண்டீர்கள்..? அருமை... :)))
// ஷங்கி....
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க... ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு அர்த்தம் கிடைக்கிறது... இப்படி ஆழமாக எழுத எப்படி கற்றுக்கொண்டீர்கள்..? அருமை... :))) //
நன்றி நவீன்!!
வழக்கம் போல் தங்களது உற்சாகமான விமர்சனத்தில் என்னை தெம்பூட்டி விட்டீர்கள். அடிக்கடி விஜயம் செய்யவும். ஆழமாக யோசிக்க கற்று கொடுத்தவை நமது முன்னோடிகளான கண்ணதாசன் மற்றும் வைரமுத்துவின் வரிகள் தாம். அதில் பத்தில் ஒரு பங்கு என் வரிகள் இருப்பின் எனக்கு திருப்தியே!!
hi arun..
if u try more definitly u wil b 100% Vairamuthu..
THERE IS NOTHING IMPOSSIBLE FOR ARUN..
Keep it up!
..pooja
Dear Arun..
Really Very good Tamil kavithai...
I thousht that u r writting kavithai for time pass..
Now only i understood abt ur real talent..
Vanna Thiraikal really written by very good, experienced, and practical guy..
I am proud of u...
//ஒவ்வொரு திரையும் நீ
தொய்வின்றி திறந்தால்
ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//
திரைக்குப் பின்னே மர்மங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
Post a Comment