Monday, August 18, 2008

இறுதிவரை


பௌர்ணமி இரவு

கண் அயரும் பொழுது

சிந்தனை சிகரத்தின் உச்சியில் தனிமையில் நான்

கண்களை மூடி காதல் காற்றினில் நின்றிருந்தேன்

மொட்டை மாடி நிலவின் வெளிச்சம்

என் மனதன்றோ பாரத்தின் உச்சம்

ரஹ்மானின் இசைவெல்லும் வண்டுகள் ரீங்காரம்

ரணத்தில் என் மனதன்றோ வெறுமை அலங்காரம்

வழக்கமான புன்னகையில் எதிர்வீட்டு தென்னைமரம்

ரசிக்க வசதியில்லா என்நெஞ்சத்தில் தோல்வி முகம்

என் கண்களை மூடி உன் கண்களை கண்டிருக்க

உன் நெஞ்சத்தில் என் தலைசாய்த்து நம்பிக்கைவை என்றாய்

உன் கண்ணீரின் வெப்பத்தில் என் மனதுக்கு மருந்தளித்து

என் தலைகோதி முத்திட்டு மீண்டுவா நீ என்றாய் -

உன் பலம் நீயறிந்து நம்பிக்கை வளர்த்திடவே

நானிருப்பேன் இறுதிவரை உன்தாயாய் என்றாயே -

இதுபோதும் எப்போதும் என்னாளுமே

மலைபோலும் துன்பங்கள் வந்தாலுமே

சளைக்காமல் அலுக்காமல் போராடியே

இவ்வுலகை எதிர்த்துநான் வெல்வேனே!!

No comments: