Tuesday, December 16, 2008
வண்ணத்திரைகள்
வண்ணத்திரைகள்
உனை ஆளும் குட்டிபுதிர்கள்
உற்று பார்த்தால் தெரியும்
சின்ன வண்ணத்திரைகள்
ஒவ்வொரு திரையும் நீ
தொய்வின்றி திறந்தால்
ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்
எளிதில் திறக்கும் என்று
எகத்தாளம் இருந்தால்
எதுவோ ஒன்று உன்
அருகில் நின்று
எட்டித் தள்ளும் - உன்னகம்
மண்முட்டி கவிழும்
புதிரின் திரையோ நீ
விடையை அறிய
பல வாய்ப்பும் வழங்கும்
சரியாய் காலம் கனிந்தால்
எல்லாம் விளங்கும் நீ
பொறுமை காத்தால்
திரையும் விலகும் என்றும்
தேடல் கொண்டால்
ஒவ்வொரு நிறமே
திரை ஒன்றும்
ஒவ்வொரு நிறமே
ஒவ்வொரு நிறமும் வாழ்வின்
ஒவ்வொரு பிரிவே
தக்க தருணம் வரையில் நீ
பக்க பலங்கள் சேர்த்தால்
கற்று தருமே - வாழ்வும் முழுதாய்
முற்றுப் பெறுமே!!
Sunday, August 24, 2008
சுனாமி பெண்
Monday, August 18, 2008
வரம்
சிதறிய ஸ்பரிசங்கள் வேண்டும் - என்
இனிய இரவுகள் வேண்டும் - உனைமட்டும்
புரிந்தும் புரியாமல் அறிந்தும் அறியாமல்
காலத்தின் அவசரத்தால் தவறவிட்ட நிதானத்தால்
நீ தான் அவளென்று ஏமாந்த என் நெஞ்சிற்கு
என் காதல் நேர்மை உணர்த்த
என் காதல் மீண்டும் என்றும் வேண்டும்
காதலர் தினம் - 2008
எண்ணங்கள் எதிர்பார்ப்பை எட்டினாலும்
நெருடல்கள் நெருங்கி நெறித்தாலும்
தருணங்கள் தடங்கல்கள் தந்தாலும்
வலிகள் வந்தாலும்
கவலை கண்டாலும்
உண்மைகள் உணர்த்தும் உரிமை
காண்கிறேன் காதலிஉன் கண்களில்
வாய்விட்டு சொல்வதற்கு ஷேமமில்லை
இத்தோடு விட்டுவிட விரும்பவில்லை
கண்கோர்த்து காதலர்தினம் களிக்கவில்லை
மனம்கோர்க்க முயற்சிகள் முயலாமலில்லை
மின்னலாய் வந்தவளை மின்னஞ்சல் மூலமாய்
மீட்டிய மடலை உன்மனதுக்கு செலுத்துகிறேன்
காத்திருப்பேன் கண்மணியே
கனிந்துவரும் உன் சொல்லுக்காய்!!
கவிதையே..
என்னை விலகி விடு
மனதால் ஒதுக்கி விடு
ஒழுங்காய் ஒழித்து விடு
கனவை கலைத்து விடு - என்
நினைவை பழித்து விடு
உன்னால் கொண்டது போதும்
உறவால் கண்டது போதும்
வலியால் வெந்தது போதும்
விதியால் நொந்தது போதும் - உன்
சுவாசத்தால் செத்தது போதும்
என்னை வாழ விடு
வாழ்வில் வளர விடு
சற்றே உலவ விடு
முழுதாய் உணர விடு - எனைக்
கொஞ்சம் கரைய விடு
உந்தன் உறவு போதும்
உணர்வின் உரிமை போதும்
கண்ணின் மயக்கம் போதும்
காமத்தின் மோகம் போதும்
உயிரின் தாகம் போதும் - காதல் கவிதையே
என் காதலும் இனி மெல்லச்சாகும்!