Tuesday, December 16, 2008

வண்ணத்திரைகள்



வண்ணத்திரைகள்
உனை ஆளும் குட்டிபுதிர்கள்
உற்று பார்த்தால் தெரியும்
சின்ன வண்ணத்திரைகள்

ஒவ்வொரு திரையும் நீ
தொய்வின்றி திறந்தால்
ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்

எளிதில் திறக்கும் என்று
எகத்தாளம் இருந்தால்
எதுவோ ஒன்று உன்
அருகில் நின்று
எட்டித் தள்ளும் - உன்னகம்
மண்முட்டி கவிழும்

புதிரின் திரையோ நீ
விடையை அறிய
பல வாய்ப்பும் வழங்கும்
சரியாய் காலம் கனிந்தால்



எல்லாம் விளங்கும் நீ
பொறுமை காத்தால்
திரையும் விலகும் என்றும்
தேடல் கொண்டால்

ஒவ்வொரு நிறமே
திரை ஒன்றும்
ஒவ்வொரு நிறமே
ஒவ்வொரு நிறமும் வாழ்வின்
ஒவ்வொரு பிரிவே

தக்க தருணம் வரையில் நீ
பக்க பலங்கள் சேர்த்தால்
கற்று தருமே - வாழ்வும் முழுதாய்
முற்றுப் பெறுமே!!

Sunday, August 24, 2008

சுனாமி பெண்


கண்ணம்மா -

காத்திருந்தேன் பத்து மாசம்

கண்ணு நெறைய கனாவோட

ரோசாப்பூ நீ மலர

கோயிலுக்கும் நேர்ந்திருந்தேன்

கடலம்மா நுரைதள்ளி என்

கணவனை தான் காவுவாங்க

சுனாமி தான் என் மனச

சுக்கு நூறா நொறுக்குதடி

மகளே உன் வாசத்த

முகரும் முன் மரிச்சாரே

மகராசன் உங்க அப்பன்

முத்துக்கு சிப்பி போல

முழுநேரம் நான் காக்க

கண்ணுக்கு மணி போல

என்னைத்தான் நெனச்சாரெ

ரகசியமா சேர்த்து வச்சு

ராட்சச அலை வந்து

காணி நிலம் கூட

கிடைக்காம அழிச்சாலும்

கண்மணியே உன் பொறப்பு

கடவுளோட வரமடி

கண்ணீரில் கண்ணு வலிக்க

கேள்விக்குறியா நான் பார்க்க

தூக்கத்தில் உன் சிரிப்பு

துக்கத்தை குறைக்குதடி

மார்போட நான் அணைச்சேன்

மக்காத என் சொத்தை

மகராசி நீ தானே

மனசுக்கு நம்பிக்கை!!

Monday, August 18, 2008

வரம்


தொலைந்த பொழுதுகள் வேண்டும் - உன்

கண்ணை மறந்து நம்

காதல் தொலைத்த கள்ள நிமிடங்கள் கட்டாயம் வேண்டும்



சிதறிய ஸ்பரிசங்கள் வேண்டும் - என்

சலனத்தால் சரிந்த நம்

காதல் விருட்சம் வேரோடு மீண்டும் செழிக்க வேண்டும்



இனிய இரவுகள் வேண்டும் - உனைமட்டும்

நினைந்த நீண்ட நினைவுகள்

நீங்காமல் என் நெஞ்சோடு என்றென்றும் வேண்டும்



புரிந்தும் புரியாமல் அறிந்தும் அறியாமல்

நான் செய்த பாவங்கள் யாவும்

புள்ளியாய் உன் காலோடு கரைய வேண்டும்



காலத்தின் அவசரத்தால் தவறவிட்ட நிதானத்தால்

நான் செய்த துரோகங்கள் யாவும்

உன் தாய்மையால் துடைத்தெறிய வேண்டும்



நீ தான் அவளென்று ஏமாந்த என் நெஞ்சிற்கு

பரிசாக அவள் தந்த வற்றாத காயத்திற்கு

மருந்தாக முழுநேரம் உன் மடிசாய வேண்டும்



என் காதல் நேர்மை உணர்த்த

நம் ஆயுள் நீள வேண்டும் - உனை

என் அன்பால் ஆள வேண்டும்



என் காதல் மீண்டும் என்றும் வேண்டும்

நான் முழுதாய் மீண்டு வர வேண்டும்

மீட்க நீ வேண்டும்!!

காதலர் தினம் - 2008



எண்ணங்கள் எதிர்பார்ப்பை எட்டினாலும்

நெருடல்கள் நெருங்கி நெறித்தாலும்

தருணங்கள் தடங்கல்கள் தந்தாலும்

வலிகள் வந்தாலும்

கவலை கண்டாலும்

உண்மைகள் உணர்த்தும் உரிமை

காண்கிறேன் காதலிஉன் கண்களில்

வாய்விட்டு சொல்வதற்கு ஷேமமில்லை

இத்தோடு விட்டுவிட விரும்பவில்லை

கண்கோர்த்து காதலர்தினம் களிக்கவில்லை

மனம்கோர்க்க முயற்சிகள் முயலாமலில்லை

மின்னலாய் வந்தவளை மின்னஞ்சல் மூலமாய்

மீட்டிய மடலை உன்மனதுக்கு செலுத்துகிறேன்

காத்திருப்பேன் கண்மணியே

கனிந்துவரும் உன் சொல்லுக்காய்!!

கவிதையே..



என்னை விலகி விடு


மனதால் ஒதுக்கி விடு


ஒழுங்காய் ஒழித்து விடு


கனவை கலைத்து விடு - என்


நினைவை பழித்து விடு



உன்னால் கொண்டது போதும்


உறவால் கண்டது போதும்


வலியால் வெந்தது போதும்


விதியால் நொந்தது போதும் - உன்


சுவாசத்தால் செத்தது போதும்



என்னை வாழ விடு


வாழ்வில் வளர விடு


சற்றே உலவ விடு


முழுதாய் உணர விடு - எனைக்


கொஞ்சம் கரைய விடு



உந்தன் உறவு போதும்


உணர்வின் உரிமை போதும்


கண்ணின் மயக்கம் போதும்


காமத்தின் மோகம் போதும்


உயிரின் தாகம் போதும் - காதல் கவிதையே



என் காதலும் இனி மெல்லச்சாகும்!

இறுதிவரை


பௌர்ணமி இரவு

கண் அயரும் பொழுது

சிந்தனை சிகரத்தின் உச்சியில் தனிமையில் நான்

கண்களை மூடி காதல் காற்றினில் நின்றிருந்தேன்

மொட்டை மாடி நிலவின் வெளிச்சம்

என் மனதன்றோ பாரத்தின் உச்சம்

ரஹ்மானின் இசைவெல்லும் வண்டுகள் ரீங்காரம்

ரணத்தில் என் மனதன்றோ வெறுமை அலங்காரம்

வழக்கமான புன்னகையில் எதிர்வீட்டு தென்னைமரம்

ரசிக்க வசதியில்லா என்நெஞ்சத்தில் தோல்வி முகம்

என் கண்களை மூடி உன் கண்களை கண்டிருக்க

உன் நெஞ்சத்தில் என் தலைசாய்த்து நம்பிக்கைவை என்றாய்

உன் கண்ணீரின் வெப்பத்தில் என் மனதுக்கு மருந்தளித்து

என் தலைகோதி முத்திட்டு மீண்டுவா நீ என்றாய் -

உன் பலம் நீயறிந்து நம்பிக்கை வளர்த்திடவே

நானிருப்பேன் இறுதிவரை உன்தாயாய் என்றாயே -

இதுபோதும் எப்போதும் என்னாளுமே

மலைபோலும் துன்பங்கள் வந்தாலுமே

சளைக்காமல் அலுக்காமல் போராடியே

இவ்வுலகை எதிர்த்துநான் வெல்வேனே!!

Wednesday, August 13, 2008

என்னவள்


எங்கோ இருக்கிறாள்


என்னையே நினைக்கிறாள்


எதையும் வெறிக்கிறாள்


எப்பொழுதும் தித்திக்கிறாள்!


தவிப்போடும் தகிப்போடும்


தலையனையை முட்டுகிறாள்


முனைப்போடும் முறைப்போடும்


முனுமுனுத்துச் சீண்டுகிறாள்!


கன்னத்தில் கைவைத்து


கண்ணிரண்டில் நீர்பூத்து


கண்ணாளன் என்னைத்தான்


கனவோடு காதல் செய்கிறாள்!


மழைநேர மண்வாசம்


பூஞ்செடியின் பூவாசம்


புத்தம்புது தாள்வாசம்


என்றென்னை எண்ணுகிறாள்!


என்காதல் சிறைவாசம்


முழுநேர தாய்ப்பாசம்


என்னோடு கொண்டிடவே


எனக்காக காத்திருக்கிறாள்!


என்னவள்,


இக்கணமும் இனிக்கிறாள்!!

Tuesday, August 12, 2008

இயற்கையின் பரிசு


என்னவள்


என் இசை மேகம்


மின்னலாய் ஒளிர்வாள் என்


உள்ளத்தின் இருளைப் போக்க


தென்றலாய் வருடுவாள் என்


மனத்தின் புழுக்கம் போக்க


சாரல் மழையாய் பொழிவாள்


என் பூமி வரண்டிடாமல் காக்க


இனியவளும்


இயற்கையின் பரிசு தான்..

காதல் துரோகம்


நித்தம் சத்தியம் செய்தேன்


எண்ணிய கருமம் எண்ணாதிருக்க


காதல் துரோகம் செய்தல் பாவம்


உள்ளம் நன்காய் உணர்ந்திருந்தும்


நோதல் ஒன்றே தொழிலாய் கொண்டு


மீண்டும் மீண்டும் வயதின் வேகம்


பகல் பொழுது போதி மரம்


இரவின் நொடிகள் தோல்வி முகம்


கிரகம் நேரம் கொடுக்கும் கிரக்கம்


சறுக்கம் நேர்த்தும் நிஜமாய் வாழ்வில்


யாகம் வேண்டும் மோகம் போக


ஆக்கம் செய்வேன் சத்தியமாக


நித்தம் சத்தியம் செய்தேன்


எண்ணிய கருமம் எண்ணாதிருக்க..

எனது உலகம்


உண்மை இல்லா உலகிலே


நீ மட்டும் உண்மையே


சுற்றும் இந்த பூமியில்


சுழலும் எந்தன் சிந்தனை


என் காதல் பிழையில்லை - நான்


உன்னை நீங்க வாய்ப்பில்லை


விழித்துக் கொள்ள விரும்பவில்லை


விழித்தாலும் உயிரே இல்லை


உயிரை உன்னில் கோர்த்து வைத்தேன்


எனது உலகம் நாமடி..

ஸ்பரிசம்


மழைத்துளிகளோடு நான் கொண்ட பயணத்தில்


குறுக்குச் சந்தில் நேரே முளைத்த மரத்தில்


இலைச் சருகுகளோடு வடிந்த அன்பின் ஈரம்


என் உதட்டைச் சேர்ந்த பின்


உணர்ந்தேன் - உன் ஸ்பரிசத்தின் சுவை ..

உயிரை உலுக்குபவளே


உயிரை உலுக்குபவளே

பாடாய் படுத்துபவளே


முகம் காட்ட அடம் பிடிப்பவளே - என்

அகம் முழுதும் ஆர்ப்பரிப்பவளே


கற்றதும் உன்னிடம் - அதைக்

கற்பிப்பதும் உன்னிடம்



விசித்திரமான பாடம் நீ - என்

வியாதிக்கு ஏதடி நிவாரணி


செல்லமாய் சொல்கிறேன்

வந்து தொலை..

சகி


பூத்திருந்த கண்கள் - உனக்குக்


காத்திருந்து கிறங்கிட - என்


இமைக்குள் உன் முத்தம் - விழி


திறந்து புன்சிரித்தேன் - வழி


காட்ட வந்திடாயோ!!

Monday, August 11, 2008

போராட்டம்


மனச்சலனம்


இரவும் பகலும்


உள்ளத்தோடு போராடுவதே உயர்ந்த போராட்டம்


சத்தியமாகச் சொல்வேன்


காதல் என்றென்றும் தோற்பதில்லை!!

இந்நாள் வியாழன் - 08/01/2004 நேரம் - 22:06:30


நான் பூஜிக்க விதித்த நகரும் பூவே
நீ இந்நொடி எங்கு மணம் கமழ்கிறாய்?

நான் படிக்க விழைந்த விடுதியில்
படிக்க உட்பட்ட கால விதியில்
உறக்க கிறக்கத்தில் உள்ளதை மறந்து
உள்ளத்தில் உனை நினைந்து

மேற்கண்டதை எண்ணிக் களித்தேன் இந்நாளில்!!

உயிர் வலி


உன் இல்லாமையை நான் உணரும் பொழுதுகளிலும்

என் எதிர்காலத்தை நான் எண்ணும் பொழுதுகளிலும்

நம் சந்திப்பை நம்பிக்கையுடன் நான் நம்பியிருப்பேன்.


என் எதிர்காலம் உன்னோடு தான் என்றிருந்தும்

உன் தாய்மை என்னோடு தான் என்றிருந்தும்

நம் சந்திப்பை ஏற்படுத்த விதி நடிப்பது ஏன்?

உயிரே


உயிரே,

உன்னோடு தொடங்கிய என் தேடலின் பயணம்

கரையும் என் உயிருள் கண்கூடி மெய்சேரத் துடிக்குதடி

முகம் அறியாமல் மணம் தெரிந்து

நிறம் அறியாமல் மனம் புரிந்து

கரை அறியாமல் ஆழமும் தெரியாமல்

உன்னோடு தொடங்கிய என் காதலின் பயணம்

தேம்பும் என் மனதுள்

நம் மனம் கூடி மணம் காண விரும்புதடி!!